
மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல்லது
அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண்டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட
முடியாது. இதனால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெண்ட்களிலும்
ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டுமே செலவாகும். ஒரு
அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு ஒரு செய்தியை மேல்அலுவலரின் கையெப்பத்தோடு,
அனுப்ப வேண்டுமெனில் சாதரணமாக கையெப்பம் இட்டோ அல்லது கையெப்பத்தை நகல் எடுத்து
ஒட்டியோ அனுப்பி விட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது
வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக தெரிவிக்க
வேண்டுமெனில் மேலே கூறியவாறு கையெப்பம்மிட்டோ அல்லது நகல் எடுத்தோ அனுப்புவது
என்பது சிரமமான ஒன்றாகும். இதற்கு பதிலாக அனைவரின் டாக்குமெண்ட்களிலும் மொத்தமாக
கையெப்பம் இட்டால் எவ்வாறு இருக்கும். இதனை செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக